யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கம் 02.06.2023 அன்று காலை 09.00 மணியளவில் கலைப்பீட கருத்தரங்க மண்டபத்தில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கி. விசாகரூபன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர். பா. ஆனந்தக்குமார் வளவாளராகக் கலந்துகொண்டு ‘பின்னை ஒப்பிலக்கியம்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



