மாணவர்கள் கவனிக்க வேண்டியவை
இணைய வழிக் கற்றலுக்காக தங்களுக்கு பயனர்பெயர், கடவுச்சொல் என்பன வழங்கப்பட்டிருக்கும். கற்றல் முகாமைத்துவ தொகுதி (LMS ) இற்குள் நுழைவதற்கு இவை அவசியமாகும்.
கற்றல் முகாமைத்துவ தொகுதியில் தங்கள் பாவனையில் உள்ள மின்னஞ்சல் முகவரி பதியப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறு இருந்தால் மட்டுமே. கற்றல் முகாமைத்துவ தொகுதிக்குரிய கடவுச்சொல் தெரியாத சந்தர்ப்பத்தில் நீங்களாகவே மீள நிறுவ (Reset ) முடியும். எனவே ஒவ்வொரு மாணவனும் கற்றல் முகாமைத்துவ தொகுதியில் தனது கணக்கிற்குரிய மின்னஞ்சல் முகவரி சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது மிக அவசியமாகும்.
Moodle என்ற கற்றல் முகாமைத்துவ தொகுதியினுள் உள்நுழைய முடியவில்லையாயின் அதனை உரியவர்களுக்கு அறிவிக்க கீழ் உள்ள பொத்தானினை தொடரவும்.
கற்றல் முகாமைத்துவ தொகுதியினுள் உள்நுழைதல் (Login)
- Browser ஒன்றினை பயன்படுத்தி, lms.jfn.ac.lk/lms என்ற தளத்திற்கு செல்லவும் (Google Chrome ஆனது Browser களுள் ஒன்றாகும்)
- வலது பக்க மேல் மூலையில் காணப்படும் “Login” இன்மேல் சொடுக்கவும்
- தங்கள் கணக்கிற்குரிய பயனர்பெயர், கடவுச்சொல் என்பவற்றை வழங்கி “Login” என்ற பொத்தானின் மேல் சொடுக்கவும். தற்போது நீங்கள் கற்றல் முகாமைத்துவ தொகுதினுள் உள் நுழைந்திருப்பீர்கள். இதனை வலது பக்க மேல் மூலையில் தோன்றும் உங்கள் பெயர் பதிவிலக்கம் என்பவற்றில் இருந்து உறுதி செய்யலாம்.
கற்றல் முகாமைத்துவ தொகுதியில் எனது கணக்குக்குரிய மின்னஞ்சல் முகவரியை எவ்வாறு சரிபார்க்கலாம்
- கற்றல் முகாமைத்துவ தொகுதியினுள் உள் நுழையவும்
- வலது பக்க மேல் மூலையில் சொடுக்கவும் (வட்ட வடிவமான பொத்தான்)
- “Preferences” இனை தெரிவுசெய்யவும்
- User Account பகுதியில் Edit Profile இனை தெரிவு செய்யவும்
- மின்னஞ்சல் முகவரியினை சரிபார்த்து பிழையிருப்பின் திருத்தி “Update Profile” என்ற பொத்தானில் சொடுக்கவும்