எம்மைப்பற்றி..

யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் உயிர்ப்பு மையமாய், பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட உயர் இலக்குகளின் நிலைக்களனாய் கலைப்பீடம் விளங்குகிறது. நாட்டின் வேறெந்த கலைப்பீடத்திலும் இல்லாதளவிற்கு பரந்த கல்வி வாய்ப்புகளை மாணவர்களுக்குத் தருகின்றது. ஆண்டு தோறும் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களில் பெரும் எண்ணிக்கையானோரைக் கலைப்பீடம் அரவணைக்கிது. இன்று 31 பாடநெறிகள் 17 துறைகள் என முழுதளாவிய நிலையில் சமூக விஞ்ஞான, மனித பண்பியல், சட்டம் ஆகிய துறைகளைச் சார்ந்த பட்டநெறிகள் இங்கே வழங்கப்படுகின்றன. பாரம்பரிய அறிவுத்தளத்தோடு தற்கால அணுகுமுறைகள் இசைந்திட எதிர்காலத்துவத்தை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது கலைப்பீடம். இன்று இத்துறை சார்ந்த கற்பித்தல் ஆய்வுச்செயற்பாடுகளை மேற்கொள்ளும் நூற்றுக்கும் மெற்பட்ட புலமையாளர்களுடன் இதனையொத்த முதன்மையான பீடங்களுக்கு நிகராக வளர்ச்சி கண்டுள்ளது.

எங்கள் உருவாக்கங்களான மாணவர்கள் தேசத்தின் சமூக, அரசியல், நிர்வாக, கல்வியியல், சட்டவியல் என அனைத்து புலங்களிலும் தமது திறமைகளால் தடம்பதித்துள்ளார்கள். சர்வதேச ரீதியிலும் உயரிய மதிப்பினைப் பெறுகிறார்கள். எங்களுக்கான அறிவுலக அங்கீகாரம் மகிழ்சியைத் தருகிறது.

 

Mission
The Faculty of Arts is committed to promote knowledge and academic excellence leading to the pinnacle of humanity in tune with the vision to which the faculty is wedded.
கலைப்பீடம் வரித்து நின்ற'நோக்கு' வழிச்சென்று அறிவுநாடிகள் மனிதமாம் சிகரம் நோக்கி கல்வியில் வித்துவம் எய்த உந்துவதில் கலைப்பீடம் தன்னை அர்ப்பணிக்கின்றது.

 

Vision
To strive hard to achieve excellence in the field of Arts by adopting admirable values of Culture ad Heritage cherished by us as expedient as possible so that humanity may continue to prosper.

பண்பாடு பாரம்பரிய விழுமியங்களைக் காலோசிதமாய் அடியொற்றி மனிதம் ஓங்க கலையில் துறை காண்போம்.

© 2018 Faculty of Arts, University of Jaffna.

Please publish modules in offcanvas position.